ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி பியா சவுத்திரி. இவர் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தாள். சிறுமி பியா ஒரு நாள் வீட்டுப் பாடம் எழுதாமல் சென்றுவிட்டாள். பள்ளி ஆசிரியர் ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி சிறுமியை தாக்கி கடுமையான தண்டனை கொடுத்தார்.
ஆசிரியர் தாக்கியதில் சிறுமியின் கண்ணீல் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். என்றாலும் சிறுமியின் கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு மாநில குழந்தைகள் உரிமை கமிஷனுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்கியது. நடந்த சம்பவத்துக்காக பள்ளி நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியது.
இதற்கிடையே மாணவியின் கண்ணீல் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்கட்டு உருவாகி அது புற்று நோயாக மாறியது. நேற்று திடீர் என்று சிறுமி பியா பரிதாபமாக இறந்தார். ஆசிரியர் தாக்கியதால் 2 ஆண்டுகள் கழித்து சிறுமி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.