ஏர்செல் – மேக்சிஸ் வழ‌க்‌கி‌ல் ஆதார‌ம் ‌கிடை‌க்கா‌வி‌ட்ட‌ா‌ல் 2ஜி வழக்கு‌க்கு மூடு‌‌விழா - சி.பி.ஐ சொ‌ல்‌கிறது !

Friday, November 9, 2012

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ஊழல் நடந்துள்ளதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்காவிட்டால், வழக்கை மூட வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான வழக்கில், சி.பிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் கூறும் போது, 2 ஜி வழக்கில் மலேசியாவிடம் இருந்து தகவல்களுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு நீதிபதி சிங்வி, எவ்வளவு நாட்கள் சிபிஐ காத்திருக்கப் போகிறது என்று கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர் வேணுகோபால், லஞ்சம் பெற்று பயனடைந்ததற்கான ஆதாரம் கிடைக்காவிட்டால், வழக்கை நடத்த முடியாது என்றும், ஆதாரமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், அதை நீதிமன்றம் தூக்கி எரிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வழக்குக்கு தேவையான ஆதாரம் கிடைக்காவிட்டால், இந்த வழக்கை மூடுவதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சிங்வி, தகவலுக்காக காலம் முழுவதும் சிபிஐ காத்திருக்க முடியாது என்றார்.

மேலும், இந்த விவகாரத்தில், தேவைப்படும் தகவல்களை சி.பி.ஐ பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

நேற்று முன் தினம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது தான், மலேசியாவில் அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு உள்ள மனிதர் இந்த வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்தது.