சீனாவில் பனிப்புயல் - 2 பேர் பலி !

Monday, November 5, 2012

சீனாவில் ஏற்பட்டுள்ள பனிப் புயலுக்கு 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் பனிப்புயலால் சீனாவின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் பனி குவிந்துள்ளதால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட ஹேபி மாகாணத்தில் ஏற்பட்ட பனிப் புயலின் போது மலை ஒன்றில் ஏறிக் கொண்டிருந்த ஜப்பானை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் பனியில் சிக்கிக் கொண்டனர். இதில் 2 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதே போல மற்றொரு இடத்தில் மீட்கப்பட்ட இரண்டு பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.