அண்டை நாடுகள் மூலம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தான் சதி !

Monday, November 5, 2012

நேபாளம் உட்பட அண்டை நாடுகளில் இந்தியாவுக்கெதிரான வேலைகளைச் செய்ய ஆட்களை பாகிஸ்தான் தயார் செய்து வருவதாக உளவு அமைப்பான "ரா" தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குக்கெதிரான சதிச்செயல்கள் வங்க தேசம் மற்றும் நேபாளத்தில் முடிந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பார்வை இலங்கை மற்றும் பர்மாவை நோக்கி திரும்பியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக தமிம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் ஐ கொமிஷன் அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறப்படுகிறது.

இதே போன்ற சதிச்செயலை, மற்ற நாடுகளிலும் செயற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக "ரா" உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற சதிச் செயல்களில் சீனாவும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.