ஒலிம்பிக் பதக்கங்கள் திருட்டு !

Saturday, October 27, 2012

லண்டனில் சமீபத்தில் பிரமாண்டமான முறையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன.

இதில் பதக்கம் வென்ற இங்கிலாந்து நாட்டு வீரர் - வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியினை பக்கிங்ஹாமில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் கலந்து கொண்ட அலெக்ஸ் பார்டிரிட்ஜ் (துடுப்பு படகு போட்டி) ஹன்னா மெக்லியோடு (ஆக்கி) ஆகியோரின் வெண்கலப்பதக்கங்கள் திருடப்பட்டன.

பதக்கங்களை திருடியவர்கள் அதை திருப்பி ஒப்படைக்குமாறு இரு வீரர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் வீரர் ஹன்னா மெக்லியோடுவின் வெண்கலப்பதக்கம் மீட்கப்பட்டது. ஆனால் அலெக்ஸ் பார்டிரிட்ஜின் பதக்கம் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.