ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், அவரது மருமகன் ராபர்ட் வதேரா மீது சமூக சேவகர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விகளை புறக்கணித்துவிட்டு, சோனியா காந்தி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஹரியாணாவில் நிலம் வாங்கிய விவகாரத்தில் ராபர்ட் வதேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.