வீட்டு உபயோகத்திற்கான மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கு உடனடி கியாஸ் இணைப்பு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் என்.ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீட்டு உபயோக கியாஸ் வாடிக்கையாளர்கள் 14.9.2012 முதல் 31.3.2013 வரை 3 மானிய விலை சிலிண்டர்களை வாங்கிக்கொள்ளலாம். அடுத்த நிதி ஆண்டில் இருந்து (2013-2014) 6 மானிய விலை சிலிண்டர்கள் கிடைக்கும்.
மேலும், தற்போது மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கு (வீட்டு உபயோகத்திற்கு) உடனடியாக கேஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்போரின் பெயரில் எந்த நிறுவனத்தின் கேஸ் இணைப்பும் இருக்கக்கூடாது. விண்ணப்பத்துடன் முகவரி மற்றும் இருப்பிடச்சான்றை சமர்ப்பிக்க வேண்டும். கே.ஒய்.சி. சரிபார்ப்புக்கு பின்னர் மானிய விலை சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இணைப்பு நிறுத்திவைக்கப்பட்டிருப்பவர்கள் மானிய விலை சிலிண்டர் கொண்ட இணைப்பாக மாற்றிக்கொள்ள முன்பு அனுமதிக்கப்பட்டார்கள்.
தற்போது அத்தகைய கேஸ் இணைப்புகளை மானியம் அல்லாத சிலிண்டர் இணைப்பாக மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். கே.ஓய்.சி. நடைமுறைகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை ரத்துசெய்யும் பணியையும் முடித்த பிறகே மானிய விலை சிலிண்டர் இணைப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
அதேபோல், முன்பு ஒருவர் பெயரில் உள்ள கேஸ் இணைப்பை குடும்பத்தில் உள்ள வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியாது. தற்போது எந்த நிறுவனத்தின் கியாஸ் இணைப்பும் பெற்றிராத உறுப்பினர் பெயருக்கு மாற்றிட முடியும் என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஏழை, நடுத்தர மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கேஸ் பதிவு செய்து பல நாட்களாக காத்திருக்கும் மக்களை மேலும் துயரத்துக்கு தள்ளும் நிலையை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்காகத்தான் அரசும், அரசு அதிகாரிகளும், ஆனால் தற்போது தலைகீழாக மாறிவிட்டது. அரசுக்கும், அரசு அதிகாரிகளும் கொள்ளையடிக்க தற்போது மக்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது.