கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தமிழக சட்டசபையை முற்றுகையிட சென்ற வைகோ, மற்றும் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, சட்டசபையை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த
நிலையில்,இப்போராட்டத்திற்கு மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் இப்போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தலைமை செயலக பகுதிக்கு வராமல் தடுக்கும் பணியில் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக சென்னை நகர் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
.
கூடங்குளம் போராட்டக் குழுவினர் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதனால், அங்கு மட்டும் சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை நகரின் நுழைவு வாயிலான கிழக்கு கடற்கரை சாலை, வேளச்சேரி சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை என்று நகரின் அனைத்து நுழைவு வாயில்களும் சீல் வைக்கப்பட்டன. நகரின் நுழைவு வாயிலில் மட்டும் சுமார் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சாவடியிலும் நேற்று இரவு முதல் சோதனை நடைபெறுகிறது.
நகரின் முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திடீர் சோதனையால் நேற்று நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 4 பேரை பூக்கடை போலீசார் இன்று காலை பார்க் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.
இதுபோல தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,பழ.நெடுமாறன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.