மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இடையே நடக்கும் சண்டையால் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு தி.மு.க. தலைவர் நொந்துகிடக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் அடுத்த மோதல் அம்பலத்துக்கு வந்துவிட்டது.
ராமநாதபுரத்தில் கடந்த 24-ம் தேதி நடந்த புதிய இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், ரித்தீஷ் எம்.பி-யை வறுத்தெடுத்திருக்கிறார் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலன்.
''ரித்தீஷ§க்கும் சுப.தங்கவேலனுக்குமான ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். சமீபத்தில் ஸ்டாலின் அறிவித்த இளைஞர் அணிப் பட்டியலில் ராமநாதபுர மாவட்டத்தின் முக்கியப் பதவிகள் அனைத்தும், சுப.தங்கவேலன் சிபாரிசு செய்தவர்களுக்கே கிடைத்துள்ளது. இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளராக ஸ்டாலின் கூடவே இருக்கும் தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத் அதற்கு முக்கியக் காரணம். தனது ஆதரவாளர்கள் இளைஞர் அணியில் நீக்கமற நிறைந்துவிட்டதால், புதிய தெம்பு வந்துவிட்டது தங்கவேலனுக்கு. அதனால் இத்தனை நாள் ரித்தீஷ் பொதுக் கூட்டங்களில் தன்னை திட்டியபோதெல்லாம் பொறுத்துக்கொண்டு இருந்தவர், இளைஞர் அணியினர் அறிமுகக் கூட்டத்தில் ரித்தீஷைப் பிரித்து மேய்ந்துவிட்டார்'' என்கிறார்கள் தி.மு.க. புள்ளிகள்.
கூட்டத்தில் சுப.தங்கவேலன் பேசியது என்னவாம்?
''யார் இந்த ரித்தீஷ்? அவருக்கும் தி.மு.க-வுக்கும் எப்படி சம்பந்தம்? அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? நான் இல்லை என்றால் ரித்தீஷ் யாரென்று மக்களுக்குத் தெரியுமா? அவர் அப்பா என்ன பெரிய நிலக்கிழாரா? சாதாரண பியூன் வேலை பார்த்தவர்தானே? எம்.பி-யாவதற்கு முன் ரித்தீஷ், ஒரு பேக்கரியில் வேலை பார்த்தார். பிராந்திக் கடையில் வேலை பார்த்தார். சரி, தி.மு.க-வுக்கு வந்த பின்னராவது கட்சிக்கு விசுவாசமாக இருந்தாரா? கட்சியை அழிக்கும் வேலையைத்தான் செய்தார்.
நான் திருவாடனைத் தொகுதியில் தோற்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த வ.து.நடராஜனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார். சோழந்தூரில் தி.மு.க-வைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினரைத் தாக்கி எனக்கு ஓட்டு விழாமல் இருக்க பிரச்னை ஏற்படுத்தினார். அதனால்தான் தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோதும், எம்.பி. என்றும் பாராமல் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் முழுதும் ரித்தீஷை உட்காரவைத்தார்கள்'' என்று ஆவேசமாகப் பேசியவர், பிறகு ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ''நான் அரசியலில் வளர்த்துவிட்டவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகத் திரும்புவதை பலமுறை பார்த்துவிட்டேன். இனி நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துபவர்கள், கட்சியை விட்டு துரத்தப்படுவார்கள்'' என்று கொந்தளித்தார்.
தங்கவேலனின் பேச்சைக் கேட்டு ரித்தீஷ் ஆதரவாளர்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ரித்தீஷ் ராமநாதபுரத்துக்கு வந்த பின்பு இதற்கு பதிலடி நிச்சயம் இருக்கும்!