திருமணமான 8வது நாளில் குழந்தை -மாப்பிளை அதிர்ச்சி !

Wednesday, October 31, 2012

திருமணமாகி 8வது நாளில் குழந்தை பெற்றதால், கணவன் - மனைவி பிரிந்து சென்றனர். குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த அஜய் என்பவருக்கும் (32), சீரோ பாயின்ட் பகுதியை சேர்ந்த நர்ஸ் கவிதா என்பவருக்கும் (28), (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) திருமணம் முடிவானது. கவிதாவின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் சர்ச்கைகள் எழுந்தன. எனினும், கவிதா அழகாக இருந்ததால், இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கவிதா வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

உடனே அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லாமல், தாய் வீட்டுக்கு சென்றார் கவிதா. அங்கும் கவிதாவுக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. மார்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிதாவுக்கு கடந்த 26ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் மணமகன் வீட்டினருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். கவிதா வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அவர்கள் மறுக்கவே, மருத்துவமனையில் விசாரித்தனர்.

அங்கு டாக்டர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் தகவல் உண்மை என்ற முடிவுக்கு வந்த அஜய் நேற்று முன்தினம் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நேற்று இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். நான் சொல்லும் டாக்டரிடம் கவிதா முழு உடல் பரிசோதனைக்கு வரவேண்டும். அப்போது தான் அவருடன் வாழ்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றார். இதை கவிதா குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் சம்மதித்து, காவல் நிலையத்தில் தனித்தனியாக எழுதி கொடுத்துவிட்டு பிரிந்து சென்றனர்.

ஆதாரத்துடன் வந்த மாப்பிள்ளை

காவல் நிலையத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், திருமணத்தின் போது எடுத்து கொண்ட படங்களை அஜய் போலீசாரிடம் கொடுத்து வயிறு பெரிதாக இருப்பதையும், தற்போது இங்கு வந்துள்ள கவிதாவின் வயிறு சிறிதாக இருப்பதையும் சுட்டி காட்டினார். இதனால் கவிதாவின் உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் பதில் சொல்ல முடியாமல் மவுனமாக நின்றனர். முதல் இரவிலேயே கவிதாவுக்கு வயிற்று வலி இருந்தது. மருத்துவமனையில் அவரை சேர்த்த போது சந்தேகம் இருந்தது. மருத்துவமனையில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றதும் அதை உறுதிப்படுத்தினோம் என்று அஜய் உறவினர்கள் கூறினர்.