முக்கிய புள்ளிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டோ வீரர்கள் விடுவிக்கபட்டுள்ளனர்.

Tuesday, October 16, 2012

முக்கிய புள்ளிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 900 கமாண்டோ வீரர்கள் விடுவிக்கபட்டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டு ஐந்து பாதுகாப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டன்.அவற்றில் ஒரு பிரிவைச் சேர்ந்த கமாண்டோ வீரர்களை முக்கிய புள்ளிகளின் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தினர்.

சுமார் 900 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். தற்போது நாடு முழுவதும் 15 முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமே கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதானல் முக்கிய புள்ளிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 900 கமாண்டோ வீரர்களை தேசிய பாதுகாப்புபடை அங்கிருந்து விடுவித்துள்ளது. அவர்கள் இனி பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                              courtsy-captan news

.