பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 20 கோடியை உடனே வழங்க வேண்டி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 10 வருடகாலமாக வழங்க வேண்டிய 20 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளது.
இதனை, கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் ஆவின் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதை போல பால் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், கறவை மாடுகளுக்கான தீவினம் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இரு மடங்கு விலை உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 50 சதவீத மானியத்தில் கால்நடை தீவினம் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.