கிரானைட் முறைகேடு வழக்கில் தனது பேரன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும் கருணாநிதியின் பேரனுமான துரை தயாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் கருணாநிதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியின் விபரம்:
கேள்வி: துரை தயாநிதிக்கு பிணையில் வெளியே வர முடியாத அளவுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதே?
பதில்: சட்டத்தரனிகளின் ஆலோசனைகளைப் பெற்று சட்டப்படி செயற்படுவார்கள்.
கே: கிரானைட் பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கேட்டிருந்தீர்களே?
ப: ஆமாம். ஏற்கெனவே இருந்த ஆட்சியில் யார் யாருக்கு கிரானைட் கல் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதையும் சேர்த்து சிபிஐ மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.
ஆனால் இந்த ஆட்சியினர் சகட்டுமேனிக்கு எல்லோர் மீதும் வழக்கு போட்டு உடனடியாக அவர்களைக் கைது செய்ய எண்ணுகின்றனர்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளைப் பயமுறுத்திவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா எண்ணுகிறார். அது எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
கே: வழக்கில் தேடப்படுவர்கள் தலைமறைவாக இருப்பது சரியா?
ப: தலைமறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி நீதிமன்றத்தின் மூலம் அணுகுவார்கள் என்றார் கருணாநிதி.