ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதன்படி இந்த ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கார்டன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகா ஆகிய 2 பேருக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் அவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு கமிட்டி கூறியுள்ளது. வேதியியல், இயற்பியல், கணிதம், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான பரிசுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர்ஆஸ்லோவில் அறிவிக்கப்படுவது வழக்கம்