வருகிற 2014 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில்,இதனை அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மேலும் பேசிய விஜயகாந்த், ஊழலுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் என்று கூறினார். அத்துடன் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களின் அச்சத்தைப் போக்க முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பகுதிக்கு நேரில் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களுக்காகவே அதிமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்தது குறிப்பிடத்தக்கது.