பிரதமர் வீட்டு வளாகத்தில் டெங்கு கொசுக்கள் இருப்பதை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, டெங்கு கொசுக்களை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி.) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்தில் கொசுக்கள் தடுப்பு பராமரிப்புப் பணியை என்.டி.எம்.சி. கவனித்து வருகிறது. அதற்கு சுகாதார அதிகாரிக்கு மாநில சுகாதாரத் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் டெங்கு கொசு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியிலும் பிரதமர் இல்லம் அமைந்த இடத்திலும் அதிகாரிகள் முழுமையாகச் சோதனை செய்தனர். அப்போது பிரதமர் இல்ல வளாகத்தில் உள்ள பல்வேறு நீருற்றுகள், ஹெலிகாப்டர்கள் வந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஹெலிபேட்கள் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசுக்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பிரதமரின் இல்லத்தைப் பராமரிக்கும் என்.டி.எம்.சி. சுகாதார அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.