அதிமுக எம்.எல்.ஏ மீது குற்றசாட்டுகளை கூறி உள்ளார் ராணி !

Friday, October 12, 2012

அதிமுக எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக அவரது இரண்டாவது மனைவி டாக்டர் ராணி பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். அவரை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. பரஞ்ஜோதி திருச்சியை சேர்ந்த பெண் டாக்டர் ராணியை 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், ராணியின் நகைகளை வாங்கி விற்று மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

பல பெண்களை ஏமாற்றியவர் பரஞ்ஜோதி என்பது தெரியவந்தது. எனினும் அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி கொடு்த்தார். இதைத் தொடர்ந்து பரஞ்ஜோதி மீது புகார் கூறிய ராணி அவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கின் கடுமை காரணமாக அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்ற நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வான பரஞ்ஜோதி தன்னை மிரட்டி வருவதாகவும், பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகளை டாக்டர் ராணி கூறியுள்ளார். பரஞ்ஜோதி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் நீதிமன்ற விசாரணைக்கு வந்த ராணி குற்றம்சாட்டினார்.

மேலும் பரஞ்ஜோதி, தன்னை திருமணமே செய்யவில்லை என்று கூறுவது பொய் என்றும், தன்னை அவர் திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளோம் அதற்கான ஆதாரங்களும் உள்ளது என்றும் ராணி அப்போது குறிப்பிட்டார்.
           
                                                                                                                                     courtsy-captan news