தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக அப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யேசுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிமோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யேசுதாஸ் தற்போது தமிழகம் கொண்டு வரப்படுகிறார்.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி நிதிநிறுவனம் நடத்தி, குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி அப்ரோ நிறுவன உரிமையாளர் யேசுதாஸ் பலரை ஏமாற்றியுள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.