பசும்பொன் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாதி, மத நல்லிணக்கத்துடனும், நாட்டுப்பற்றுடனும், உறுதியான கொள்கைகளுட னும், தியாக மனப்பான்மையுடனும் பசும்பொன் தேவர் வாழ்ந்தார். மதுரை-காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்தொகை மிகவும் குறைவானது. அதிகமான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேவர், கள்ளர், அகமுடையார் ஆகிய இனங்களை ஒருங்கிணைத்து தேவர் இனம் என்று அறிவிக்கப்படும் என்று 1995-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இனம் வாரியாக இட ஒதுக்கீடு செய்யப்படுவதுபோல, பதவி உயர்வும் இன வாரியாக வழங்கப்பட வேண்டும் என்றார்.
ஜி.கே.மணியுடன் மாவட்டச் செயலர்கள் கிட்டு (மதுரை), தங்கராஜ் (ராமநாதபுரம் மேற்கு), சண்முகம் (ராமநாதபுரம் கிழக்கு) உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.