கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் 105-வது ஜெயந்தி விழா, 50-வது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இந்த ஆண்டு 105-வது ஜெயந்தி விழா, 50-வது குருபூஜை
அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தொடங்கி வைத்தார். காலையில் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. 8 மணிக்கு லட்சார்ச்சனை மற்றும் மகா யாக சாலை பூஜைகளை சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மூர்த்தி சுவாமிகள் மற்றும் குழுவினர் நடத்தினர்.
மாலை 6 மணிக்கு தேவர் நினைவிட வளாகத்தில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அலங்காரத் தேரில் தேவர் சிலை பவனி நடைபெற்றது. இன்று காலை லட்சார்ச்சனையும், யாகசாலை பூஜையும் நடைபெற்றன . இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 33 அபிஷேகங்களுடன் மகா குரு பூஜையை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.