தேவர் குருபூஜையில் 10 அமைச்சர்கள் பங்கேற்பு

Tuesday, October 30, 2012

கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் தேவர் 105-வது ஜயந்தி விழாவில் அமைச்சர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் க.ந்நதகுமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.விஸ்வநாதன் வரவேற்கிறார். தேவர் உருவப் படத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைக்கிறார்
.அமைச்சர்கள் எஸ்.சுந்தரராஜ், எஸ்.கோகுல இந்திரா, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகின்றனர்.

விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீóர செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், பி.செந்தூர் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.விழாவிற்கு ஜே.கே.ரித்தீஸ் எம்.பி., மு.முருகன் எம்.எல்.ஏ., கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.