நீலம் புயல் இன்று மாலை சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்பதால், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகள் முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டி வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் , விவசாயிகள் பாதிப்பு : நீலம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக மழைப் பொழிவை சந்தித்த மாவட்டம் நாகப்பட்டினம். மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆறுகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதை அடுத்து நாகை துறைமுகத்தில் 5 – ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் முழுவதும் 21 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை இம்மாவட்டத்தில் மிகுந்த கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சேத விவரங்களை அறிய 1077 கட்டணமில்லாத தொலைபேசி எண் சேவை துவக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கன மழை காரணமாக 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடலூர் – புதுவையில் கனமழை : நாகைக்கு அடுத்து அதிக மழைப் பொழிவை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது. புயல் மற்றும் மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கூறியுள்ளார். தொடர் மழை காரணமாக நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மொத்த மின் உற்பத்தியில் 700 மெகாவாட் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, புதுச்சேரி துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் குறித்த தகவல்களை அறிவதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை புதுச்சேரியில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காத்திருக்கும் கன மழை : அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரை நாகை, கடலூர், புதுவையில் மிகுந்த கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையில் அதிக கன மழை பெய்யும் எனவும், தஞ்சை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.