கோஷ்டி மோதலில் திமுக தொண்டர்கள் 3 பேருக்கு தலையில் காயம்!

Tuesday, October 30, 2012

அருப்புக்கோட்டை : தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு அருப்புக்கோட்டையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனுக்கு சொந்தமான ஆலையில் விருந்து அளிக்கப்பட்டது.

அன்பழகனுடன் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சுப. தங்கவேலன், திமுக எம்.பி., ரித்திஷ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு கார் நிறுத்துவது தொடர்பாக சுப. தங்க வேலன் ஆதரவாளர்களுக்கும், ரித்திஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 4 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக தொண்டர்கள் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.