மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து !

Monday, October 29, 2012

தமிழக கடலோரப் பகுதிகளில் சீற்றம் கடுமையாகக் காணப்படும் நிலையில், கோடியக்கரையில் இருந்து சென்ற மீனவப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் இருந்து நேற்று இரவு நான்கு மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு நேரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் காற்று அதிகமாக வீசியதால் கடல் தண்ணீரில் மூழ்கியது.

இதில் கடலில் விழுந்த இரண்டு மீனவர்களை, மற்றொரு படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர். ஆனால் மற்ற இரண்டு மீனவர்களின் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் மீனவக் கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.