தங்க பதக்கம் வென்ற நடிகை !

Monday, October 15, 2012


கேரளாவில் மாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டியில் நடிகை அனன்யா தங்கம் வென்றுள்ளார்.

நடிகை அனன்யா பள்ளிக்கல்வியின் போது 9ம் வகுப்பு முதல் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தொடங்கினார்.மேல்நிலைப்பள்ளி படிப்புகளின் போது (11 மற்றும் 12ம் வகுப்பு) மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

பின்னர் சினிமாவிற்கு நடிக்க வந்ததும் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்தி இருந்தார்.இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவின் பிரதான நகரான கொச்சியில் நேற்று நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் அவர் கலந்து கொண்டு காம்பவுண்ட் பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனன்யா தகுதி பெற்றுள்ளார்.