சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு திருப்பாசேத்தி அருகே மிக்கேல்பட்டணம் கிராமத்தில் மருதுபாண்டியர் படத்துக்கு அக்.27-ம் தேதி மாலை அணிவித்தனர்.
அப்போது வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, ஆட்டோ ஓட்டுநர் செல்லப்பாண்டி ஆகியோரிடையே ஏற்பட்ட தகராறில் பிரபு தரப்பினர் செல்லப்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு கார்களில் தப்பிச் சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த திருப்பாச்சேத்தி சட்டம்-ஒழுங்கு எஸ்ஐ ஆல்வின் சுதன் உள்ளிட்டோர் விரட்டிச் சென்று வேம்பத்தூரில் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் பிரபு, அவருடன் வந்தோர் ஆல்வின் சுதனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். இதில் அவர் இறந்தார். இந்நிலையில், புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ம. பாரதி (25), சௌ. அய்யனார் (29), ஜோ. மணிகண்டன் (24), ரா. சோணைமுத்து(36), க. பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.