மிளகாய் ப‌ொடி தூவி ஒன்றரை கிலோ நகை கொள்ளை !

Tuesday, September 4, 2012

கடலூர் : நகை வியாபாரியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி ஒன்றரை கிலோ தங்க நகைக‌ளை மர்மநபர்க‌ள் கொள்ளையடித்த சம்பவம், கடலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் செல்வாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட 3 நகை வியாபாரிகள், விற்பனைக்காக, கடலூருக்கு நகைகள் கொண்டு வந்திருந்தனர். இன்று காலை 06.15 மணியளவில் வந்த அவர்கள், பின் தனித்தனியாக அவர்கள் வழக்கமாக தங்கும் லாட்ஜூகளுக்கு சென்றனர்.

இவர்களில் வெங்கடேசன், வழக்கமாக தங்கும் சின்னவாணிகர் தெருவில் உள்ள லாட்ஜிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில், வெங்கடேசனை பின்தொடர்ந்த மர்மநபர்கள், கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவியதோடு மட்டுமல்லாது, கத்தியை காட்டி மிரட்டி. வெங்கடேசன் வைத்திருந்த பையை திருடிச் சென்றனர். அப்பையில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ. 36 லட்சம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.