வைகோ தொடர் உண்ணாவிரதப் போராட்டம் !

Thursday, August 30, 2012

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில், நாளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.இது குறித்து மதிமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஈழத்து இளைஞர் செந்தூரனின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவரையும், ஈழத் தமிழர்களையும், சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து, உடனடியாக திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு, தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக சார்பில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நாளை ஆகஸ்ட் 31ம் தேதி காலை 9.00 மணிக்கு துவங்கும் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கிறார். மாலை 5.00 மணி அளவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உண்ணாநிலை அறப்போராட்டத்தை முடித்து வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.