கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை - சாதியத்தாக்குதலாக திசை திரும்புகிறது!

Friday, August 31, 2012

திமுக முன்னால் எம் எல் ஏ  காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை 9.40 மணிக்கு வெட்டி படுகொல்லை செய்யப்பட்டார்.  " கமுதி வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள் . அவரது சொந்த ஊர் மேலராமநதி எனும் கிராமம் .


மேலராமநதி எனும் ஊரில் தேவரினத்தினைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே உள்ளன. மிகவும் செல்வாக்கு வாய்ந்த திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்களோடு அதே கிராமத்தைச் சேர்ந்த கீழராமநதி பள்ளர் சமூகத்தில் சிலர் முரண்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமுதி மேட்டுத் தெருவில் வீட்டில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத இருவர் நுழைந்து சராமரியாக வெட்டப்பட்டு வெள்ளைச்சாமித்தேவர் இறந்துள்ளார். தடுத்த அவரது மனைவியும் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்த கொலை கீழராமநதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளிகளில் ஒருவரை வெள்ளைச்சாமித்தேவர் மகன் கத்தியால் குத்தியுள்ளதாகவும் பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . பரபரப்பான நிலை இங்கே உருவாகி உள்ளதால் சரியான முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது "
                                                                                                                                                                                                                                                          courtesy-Devar tv