சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்றில், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகர்கோவிலில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.