திருநங்கையர்கள் ஓய்வூதியத் திட்டதிற்க்கு ரூ 1 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு !

Wednesday, August 1, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக
""""ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்"" என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்


இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து
59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்