சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க பெருமைகளில் ஒன்றான பட்டு நெசவுத் தொழில் பட்டுப் போகாமல் பாதுகாப்புடன் விளங்கும் வகையிலும், ""கிராமத்தின் உயர்வே நாட்டு உயர்வு"" என்பதற்கேற்ப கிராமப் பொருளாதாரத்தை
ஊக்குவிக்கும் வகையிலும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தினை தமிழக முதலiமைச்சர் ஜெயலலிதா
தலைமையிலானஅரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் அனைத்து ஜவுளிப் பூங்காக்களுக்கும், அதன் திட்டத் தொகையில் 9 விழுக்காடு அளவிற்கு அதாவது 9 கோடி ரூபாய்க்கு மிகாமல் தமிழக அரசால் மானியம் வழங்கப்பட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
தற்போது, இத்திட்ட வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் புல எண். 3/3-ல் உள்ள 75 ஏக்கர் அரசு நிலத்தில் """"பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா"" அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்படி, இந்தப் பட்டுப் பூங்கா அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பீடான 83.83 கோடி ரூபாயில், 9 விழுக்காடு தொகையான 7 கோடியே 54 லட்சம் ரூபாயினை மானியமாக தமிழக அரசு, பட்டு பூங்காவிற்கு வழங்குவதற்கும், 13 கோடியே 77 லட்சத்து 25 ஆயிரத்து 794 ரூபாய் மதிப்புடைய மேற்படி 75 ஏக்கர் அரசு நிலத்தை, தமிழக அரசின் மானியத் தொகையான 7.54 கோடி ரூபாய் போக, எஞ்சிய தொகையான 6 கோடியே 23 லட்சம் ரூபாயை உத்திரவாதமற்ற அரசுக் கடனாக 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தத்தக்க வகையில், பட்டுப் பூங்காவிற்கு வழங்குவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டுப் பூங்கா, பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான தறிக்கூடங்கள், பட்டு நூலை சாயமிட தேவையான சாயச்சாலைகள், வடிவமைப்பு மையம், பரிசோதனைக்கூடம், பயிற்சி மையம், மருந்தகம், பொதுவசதி மையம், சில்லறை விற்பனை நிலையம், கண்காட்சியறை, மூலப்பொருட்களை சேர்த்து வைப்பதற்கான மையம் போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். இந்த பட்டுப் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற அனைத்து வசதிகளும் தமிழக அரசால் வழங்கப்படும். இப்பட்டுப் பூங்கா உருவாவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10000 பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவர்.
இதேபோன்று, உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்ட தரத்துடன் புதிய வடிவமைப்புகளில் கைத்தறி துணிகளை உற்பத்தி செய்யும் பொருட்டும், நெசவுத் தொழிலை ஒரு சமுதாயம் சார்ந்த தொழிலாக அன்றி, உரிய பயிற்சி பெற்ற அனைவரும் நெசவுத் தொழிலை மேற்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், தமிழ்நாட்டில் கைத்தறி செறிவுப் பகுதிகளான கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரத்தில் நெசவாளர் பயிற்சி மையங்கள் அமைத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெறும் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தலா 46 லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாய் செலவில் கைத்தறி நெசவாளர் பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக 92 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் ஒப்பளிப்பு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளிலுள்ள கலைக்கப்பட்ட கைத்தறி/ விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான இடங்களில் கைத்தறி நெசவாளர் பயிற்சி மையங்களை தொடங்கி நெசவு செய்தல், சாயம் தோய்த்தல், வடிவமைப்பு, பதனிடுதல், சித்திர வேலைப்பாடு போன்றவற்றில் நெசவாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் கைத்தறித் தொழில் மேன் மேலும் தமிழகத்தில் வளர்வதற்கும், கைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் வழிவகுக்கும்.