மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள்: விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தல் !

Thursday, July 26, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியஅரசின்,சமூகநீதிமற்றும்அதிகாரம் வழங்கும் அமைச்சகம் மூலம் மாற்றுத் திறனாளிகள்மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசியவிருதுகள் 3.12.2012 அன்று புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கான 1 தேசிய விருதுகள் கீழ்க்குறிப்பிட்ட பிரிவுகளில் வழங்க தகுந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. சிறந்த மாற்றுத்திறனாளிபணியாளர்கள்/சுயதொழில் புரியும் மாற்றுத்
திறனுடைய நபர்கள்

2. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய சிறந்த தனியார் தொழிலதிபர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தந்த பணியமர்த்தும் அலுவலர் அல்லது நிறுவனங்கள்,

3. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்து வரும் தனி நபர்/ நிறுவனங்கள்

4. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்கள்த்தும் வகையிலான உதவி உபகரணங்களை சிறந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைத்தவர்கள்

6. மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய நிறுவனங்கள்

7. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த மாவட்டம்

8. தேசியஅறக் கட்டளையின் சிறந்த உள்ளூர் அளவிலான குழுக்கள்

9. தேசிய மாற்றுத் திறனுடையோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனங்கள்

10. சிறந்த தனியான ஆக்கத் திறன் வாய்ந்த மாற்றுத் திறனுடைய நபர்கள்

11. சிறந்த தனியான ஆக்கத் திறன் வாய்ந்த மாற்றுத் திறனுடைய குழந்தைகள்

12. சிறந்த பிரெய்லி அச்சகம்

ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்,

மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்/நிறுவனங்கள்

இதற்கான படிவங்களை 2012 என்றஇணையதளத்தில் இருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது சம்பந்தப்பட்ட மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம், கே.கே. நகர், சென்னை 78 ஆகியவற்றிலிருந்து பெற்று தக்க இணைப்புகளுடன் வருகிற 3.8.2012க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களின் பரிந்துரையுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், கே.கே. நகர், சென்னை 600 078 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.