அமெரிக்க கடற்படை சுட்டு மீனவர் பலி !

Tuesday, July 17, 2012

கீழக்கரை:

கீழக்கரை அருகே உள்ள தோப்புவலசையைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர், துபாய் அருகே அமெரிக்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரும் 3 தமிழர்களும் 2 அராபியர்களும் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த அமெரிக்க கடற்படையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இவர் இறந்தார்.