காரைக்காலில் காவல் நிலையம் மீது விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் !

Tuesday, July 10, 2012

காரைக்கால்:

காரைக்காலில் காவல் நிலையம் மீது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் நிலவுகிறது.

இன்று காலை காரைக்காலில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்தவர் உரசிச் சென்றதில் அவர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.


இதை அடுத்து அவர் போலீஸ் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் வர தாமதம் ஆனதை தொடர்ந்து

போலீஸாருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் தமிழ்ச்செல்வனை தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து அங்கே குவிந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் போலீஸ் வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தி,

போலீஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும்,போலீஸாரைக் கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் கோபம் அடைந்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர், காரைக்கால் காவல் நிலையத்தைத் தாக்கி சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.