சரத் பொன்சேகாவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரியவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது பௌத்த தேரர்கள் சிலர் பங்கேற்றதாகவும் அடுத்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸாவிற்கு அழைப்பு விடுப்பதென ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதியான சமூகத்திற்கான இலங்கையர்களின் தேசிய இயக்கத்தின் அங்குரார்பன நிகழ்வின் பின்னரே இருவருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த இயக்கம் நாட்டில் சட்டத்தை நிறுவுதல், இலஞ்ச, ஊழல், மோசடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்தல், தடையற்ற அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழிசமைத்துக் கொள்ளல், நாட்டில் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை நிறுவுதல் ஆகியவற்றுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுப்பது மட்டுமன்றி ௭திர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருக்கின்றது.