பெருந்துறை அருகே ஆலப்புழை ரயிலில் தீவிபத்து

Thursday, June 28, 2012

ஈரோடு:

ஈரோடு அருகே பெருந்துறை ரயில் நிலையத்துக்கு வரும்போது, சென்னை - ஆலப்புழை ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது.

பெருந்துறைக்கு சற்று முன்னர் ரயில் வரும்போது இன்று அதிகாலை ரயிலின் சரக்குப் பெட்டியில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.


ஈரோடு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்தில் பயணிகள் பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை .

பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரயில் ஆலப்புழை புறப்பட்டுச் சென்றது.

மேலும், இந்த விபத்தால், சென்னை மற்றும் வடக்கில் இருந்து ஈரோடு வழியாக கோவை மற்றும் கேரளம் செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாகச் சென்றன.