ஜெகன்மோகன் ரெட்டி கைதானதாக வதந்தி:ஐதராபாத்தில் பஸ்கள் எரிப்பு

Saturday, May 26, 2012

நகரி.

ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். 

நேற்று வழக்கு விசாரணைக்காக ஐதராபாத் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். 
இன்றும் விசாரணை தொடர்கிறது.

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கைதானதாக வதந்தி பரவியது. இதையடுத்து அங்குள்ள வனஸ்தலிபுரம் என்.ஜி.ஓ. காலனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்களை 
ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தீவைத்து எரித்தனர். இதில் 2 பஸ்களும் அடியோடு எரிந்து நாசமானது.

தகவல் அறிந்ததும் அப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பின்னர் பதட்டமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் சில காங்கிரஸ் அலுவலகங்களை அடித்து நொறுக்கினர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.