காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர். துபாயை சேர்ந்த தம்பதியர், ரம்ஜான் பண்டிகையையொட்டி பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகத்துக்கு கடந்த, 18ம்தேதி சென்றனர். கடைக்கு வெளியே, காரை நிறுத்தி விட்டு, குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டு விட்டு, பொருட்களை வாங்கச் சென்றனர். சில நிமிடங்களில் திரும்பி வந்த அந்தத் தம்பதியருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.