பெ‌ண் எ‌ன்ற காரண‌த்‌தி‌ற்காக பெ‌ற்ற மகளையே அடி‌த்து உதை‌த்து ‌‌கொ‌ன்ற த‌ந்தை.

Thursday, February 7, 2013

பெ‌ண் எ‌ன்ற ஒரே காரண‌த்‌தி‌ற்காக பெ‌ற்ற மகளையே அடி‌த்து உதை‌த்து ‌‌தீயா‌ல் சுடு வை‌த்த கொடூரமான த‌ந்தையா‌ல் அ‌ந்த‌ ‌சிறு‌மி ப‌ரிதாபமாக உ‌யி‌‌‌ரிழ‌ந்தது. இ‌ந்த கொடூர ச‌ம்பவ‌ம் கர்நாடக மாநிலத்தில் நட‌ந்து‌ள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள முகுடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.
தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கவேண்டுமென கற்பனையில் வாழ்ந்தவருக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறந்தன.

இதனால் பெண் குழந்தைகளின் வெறுப்பை வளர்த்துக்கொண்ட ரமேஷ் தனது கடைசி மகளை தொடர்ந்து அடித்தும் உதைத்தும துன்புறுத்தினார். மனிதாபிமானமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்தும் காயப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, அடி உதை சித்ரவதை என வலியால் வேதனைப்பட்ட அச்சிறுமி கடந்த டிசம்பர் மாதம் ஹுப்ளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுமியின் உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிந்திருப்பதையும், தீயால் சுடப்பட்டிருந்த காயங்களுக்கும் இரு‌ப்பதை கண்டு பதறிப்போன மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்‌றிரவு மரணம் அடைந்தாள். இதனை தொடர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.