வடலூர்: குறிஞ்சிப்பாடியில், போதை தலைக்கேறிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆடைகளை கழற்றி வீசி, அரை நிர்வாணமாக கிடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பாச்சாரப்பாளையம், மீனாட்சி பேட்டை பகுதிகளில் ஏற்பட்ட ஜாதி மோதலை அடுத்து, நெடுஞ்சாலை போலீஸ், இரண்டு வாகனங்களில் அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலை ரோந்து - 9ல் பணியிலிருந்த, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் என்பவர், இரவு, 9:00 மணியளவில், மூக்கு முட்ட குடித்து, போதை தலைக்கேறி, குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் அருகேயுள்ள பிள்ளையார் கோவிலில், ஷூக்கள் ஒருபுறம், போலீஸ் சீருடை ஒருபுறம் என, கழற்றி வீசி, ஜட்டி, பனியனுடன், "ஹாயாக' அரை நிர்வாணமாக படுத்துக் கிடந்தார்.
அவ்வழியாகச் சென்றவர்கள், அவருக்கு ஆடைகளை போட்டு விட்டனர். முரண்டு பிடித்த ராமலிங்கம், மீண்டும் ஆடைகளை கழற்றி வீசி, கவலையின்றி கிடந்தார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
courtsy-dinamalar