ஈட்டா: உ.பி.யில் ஆளும் கட்சி எம்.பி.யின் காலை தொட்டு போலீஸ் அதிகாரி வணங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ளது. இந்நிலையில் உ.பி.யின் ஈட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்சிகிச்சை முகாம் நடந்தது.
இதில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்கோபால் யாதவ், கலந்து கொள்ள வந்தார். அப்போது ஈட்டா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அஜெய் மோகன் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
எம்.பி. வந்தவுடன் திடீரென அவரது காலை தொட்டு வணங்கினார். இதையடுத்து சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அங்கிருந்த சிலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இது குறித்து எம்.பி.யிடம் கேட்டபோது, கட்சித்தொண்டர்கள் அவரது காலில் விழாமல் தடுக்கும் முயற்சியில் தான் அந்த போலீஸ் கண்காணிப்பாளர் ஈடுபட்டார். எனது காலில் அவர் விழவில்லை என விளக்கம் அளித்தார்.