சிவகங்கை பகுதியில் வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான இடத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா சனிக்கிழமை பார்வையிட்டார்.
சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாருக்கு சிவகங்கையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்காக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக சிவகங்கையில் காளையார்கோவில்-தொண்டி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் கோகுல இந்திரா பார்வையிட்டார். அதிகாரிகள் இடத்துக்கான வரைபடத்தை காண்பித்து அமைச்சரிடம் விளக்கினர்.
அப்போது ஆட்சியர் ராஜாராமன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், மாநில பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் முருகானந்தம், குணசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்