சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட என்கவுண்டரைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று மருதுபாண்டியர் குருபூஜை விழாவின் போது அஞ்சலி செலுத்த சென்றவர்களில், வேம்பத்தூரை சேர்ந்த செல்லப்பாண்டியன் தரப்பினருக்கும், புதுக்குளத்தை சேர்ந்த பிரபு தரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த திருப்பாசேத்தி சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனை பிரபு தரப்பினர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் 30.11.12 அன்று ஒரு வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்காக பிரபு மற்றும் பாரதி ஆகியோரை மதுரை மத்திய சிறையிலிருந்து போலிஸ் வேன் ஒன்றில் அழைத்துவரப்பட்டனர். அப்போது மானாமதுரை அருகே தீத்திப்பேட்டை கிராமத்தில் வயல் பகுதியில் டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில் பிரபு மற்றும் பாரதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும் மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளத்துரையை கைது செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்