தலைநகர் புதுடெல்லியில் மேலும் ஒரு கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
தெற்கு டெல்லியில் நேற்றிரவு ஜெய்ப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், பிருந்தாவனிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் அந்தப் பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி எனும் இடத்தில் சந்தித்துள்ளார். இரவு நேரம், அருகில் யாருமில்லாத இடம் என்பதால், அந்தப் பெண்ணை மூவரும் அங்கேயே கற்பழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கல்காஜியில் விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த அந்தப் பெண் உடனடியாக தனக்குத் தெரிந்த ஒரு நண்பரை அழைத்து நடந்ததைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தெற்கு டெல்லி போலிசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழித்தவர்கள் மூவரும் தப்பிவிட்டாலும் அதில் ஒருவனைப் பிடித்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தார்கள். இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது நாட்டையே அதிரவைத்துள்ளது.