ஒரு மணிநேரம் தங்கிச்சென்ற அறைக்கு ரூ.37 லட்சம் செலவிட்ட பிரணாப் முகர்ஜி.

Thursday, December 27, 2012

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த அக்டோபர்  மாதம், பெலகாமில் ஒரு மணிநேரம் மட்டுமே தங்கிச்சென்ற அறைக்கு ரூ.37 இலட்சம் செலவிடப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகாவின் சட்டத்துறை அலுவலக கட்டிடமான சுவர்னா விதானா சௌதாவை திறந்து வைத்தார் பிரணாப் முகர்ஜி.
எனினும், World Kannada Meet (WKM) எனும் நிகழ்வுக்காக கடந்த வருடம் இச்சட்டத்துறை கட்டிடம் மீண்டும் புதிக்கப்பட்டது. இதில் இரு சேர்கிட் கட்டிடங்கள் இருந்ததாகவும், அதில் ஒன்றில் இரு வருடங்களுக்கு முன்னரே திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சேர்கிட் ஹவுஸ் கடந்த ஒக்ரோபர் மாதம், ரூ.198 லட்சம் செலவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மீள் புதுப்பித்தலுக்கு ரூ.161 லட்சமும், பிரணாப் முகர்ஜி தங்கிச்செல்லவிருந்த அறைக்கு ஃபேர்னிஷிங் செய்வதற்கு ரூ.37 இலட்சமும் பொதுமக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிடப்பட்டுள்ளது.

இக்கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி ஒரு மணிநேரத்தில் அப்புதுப்பிக்கப்பட்ட அறையிலிருந்து சென்றுவிட்டார். இதற்கு இவ்வளவு ஆடம்பர செலவு தேவையா என புதிய கேள்வி எழுந்துள்ளது.

பிமாபா கதாத் எனும் நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி இத்தகவல்களை கோரி பெற்றுள்ளார் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.