எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது இரட்டை இலை வடிவம் அல்ல-அரசு விளக்கம்.

Tuesday, December 11, 2012

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தை தமிழக அரசு புதுப்பித்து உள்ளது. நினைவிடத்தின் முகப்பில் இரட்டை இலை போன்ற வடிவம் அமைத்து இருப்பதாக கூறியும், அதை நீக்க வேண்டும் என்று கோரியும் ஐகோர்ட்டில் தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி பால் வசந்த குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அட்வேகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது இரட்டை இலை வடிவம் அல்ல. அது பறக்கும் குதிரையின் உயர்த்தப்பட்ட இறகுகள் என்று தெரிவித்தார். ஏற்கனவே இதனை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு மனு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. எனவே இந்த மனு விசாரனைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.