இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஒபாமாவின் நிர்வாகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒபாமா ஜனாதிபதி பதவி வகித்த போதே, அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இல்லாத போதும், சுமார் 25 முக்கியப் பொறுப்புகளில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவில் 31 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கு சற்றே அதிகமாகும்.
ஒபாமாவின் தற்போதைய நிர்வாகத்தில் உள்துறை, கருவூலம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு 1987ஆம் ஆண்டு ரீகன் ஜனாதிபதியாக இருந்த போது, ஜாய் செரியன் என்பவர் சமமான வேலைவாய்ப்பு ஆணையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இதுவே, முதல்முறையாக இந்தியர் ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் நியமிக்கப்பட்ட நிகழ்வாகும்.
ஒபாமா முதல் முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (யுஎஸ்ஏஐடி)யின் நிர்வாகியாக, ராஜ் ஷா என்ற அமெரிக்க வாழ் இந்தியரை நியமித்தார்.
இதுதான் இந்தியர் ஒருவரால் அமெரிக்காவில் வகிக்கப்பட்ட மிக உயர்ந்த பதவியாகும்.
பின்னர்,போலிஸ்கான அமெரிக்கத் தூதராக வினய் தும்மலப்பள்ளி நியமிக்கப்பட்டார்.
ஒபாமாவின் நிர்வாகத்தில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை உதவி பாதுகாப்புச் செயலர், தேசிய அறிவியல் கழக இயக்குநர், எரிசக்தித் துறையின் சூழலியல் மற்றும் அணுத் திட்டங்களுக்கான இணைத் தலைவர், நீதித்துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலரின் ஆலோசகர், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர், சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதப்பரவல் தடுப்பு அமைப்பின் ஆலோசகர் என்பவை உள்ளிட்ட அதி முக்கியமான பொறுப்புகளில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.