கரும்பு விலையை டன்னுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி அறிவிக்கக்கோரி சென்னை கோட்டை முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு மூலப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கரும்பு சாகுபடி செய்வதற்கு தேவையான உரங்கள் விலை கடந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. வேலையாள்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்திச்செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரும்பு கொள்முதல் விலையை ரூ.2,350 என மாநில அரசு அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட கரும்பு விலையைவிட டன்னுக்கு ரூ.250-யை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுவும் குறைவான தொகைதான். ஆனால், மாநில அரசு விலையை உயர்த்தவில்லை. கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,500 உயர்த்தி மாநில அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் பிற விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னை கோட்டை முன்பு டிசம்பரில் போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு நியமித்துள்ள டாக்டர் சி.ரங்கராஜன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினால் கரும்பு விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் கரும்பு விவசாயம் அழிந்துவிடும். சர்க்கரை ஆலைகளும் காணாமல் போய்விடும். சர்க்கரையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய நிலை உருவாகும். எனவே, ரங்கராஜன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் கரும்புகள் காய்ந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, விவசாயத்துக்கு போதிய அளவு மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இம்மாநாட்டில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னுசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகல் சங்க மாநிலப் பொதுச்செயலர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலப் பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி, ஈரோடு மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.காசியண்ணன், சக்தி சர்க்கரை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர டி.பி.கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.