பெட்ரோல் குண்டு வீச்சு – மேலும் ஒருவர் பலி !

Wednesday, November 28, 2012


பசும்பொன் குருபூஜை அன்று தலித்துகள் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 6 பேர் பலியானார்கள்.


இன்று ஒருவர் பலி :

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் (20) என்பவர் நேற்று வரை உணவருந்தியும் , பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிவந்தனர். இன்று காலை திடீரென்று இறந்துள்ளதாக போலீசாருக்கும் அவரது உறவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சிவராமன் தாயாரை மிரட்டிய போலீசார் :

சிவராமன் (20) இறந்ததை அடுத்து விரைந்துவந்த போலீசார் சிவராமன் உடலை கைப்பற்றி தகவலை வெளியிடாமல் புதைத்துவிட திட்டமிட்டு அவரது தாயாரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தாயாரிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் சடலத்தை பிரித்து காவல்துறை மட்டும் மயானத்திற்கு உடலை கொண்டு சென்றுள்ளதாகவும் , தாயார் சுமார் அரைமணி நேரம் கழித்தே மயானத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. யாரையும் போலீசார் மயானப்பகுதிக்கு அனுமதிக்கவில்லை தேவரின பாதுகாப்பு பேரவை , முக்குலத்தோர் எழுச்சிக் கழகம் அமைப்பாளர்கள் உட்பட சுமார் 50 பேர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.


                                                                                                                                             courtsy-devartv